|
 |
|
தளையசிங்கம்.மு:
பெயர்: மு. தளையசிங்கம்
பிறப்பிடம்: புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.
(1935) |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்
படைப்புகள்:
சிறுகதைகள்:
- பெப்பிரவரி 4
- புதுக்குரல்கள்
- கலைஞனின் தாகம்
- அண்டை வீடுகள்
- உள்ளும் வெளியும்
- மெய்
- தியாகம்
- வெள்ளை யானை
- புதுயுகம் பிறக்கிறது – சிறுகதைத்
தொகுப்பு (இனப்பிரச்சனையை மையக் கருவாக்கி முதல்முதல் படைக்கப்பட்ட
ஆக்க இலக்கியம்) - 1965
நாவல்கள்:
- ஒரு தனிவீடு - 1960
- மெய்யுள் - 1974
- போர்ப்பறை - 1970
இவர்பற்றி:
- ஈழத்தின் முக்கியமான இலக்கிய
ஆளுமைகளில் ஒருவர். 1957 பல்கலைக்கழகத்தில்
படித்துக்கொண்டிருக்கும்போது 'சுதந்திரம்' என்ற பத்திரிகையில்
இவருடைய முதல் சிறுகதையான தியாகம் வெளிவந்தது. முதல் நாவலான 'ஒரு
தனிவீடு' 1960 இல் எழுதப்பட்டது. முற்போக்கு எழுத்தாளர்களுடன்
ஒருகட்டத்தில் முரண்பட்டார். விமர்சன விக்கிரகங்கள், ஏழாண்டு இலக்கிய
வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம் ஆகிய இவரது கட்டுரைகள் இவ்வகையில்
குறிப்பிடத்தக்கன. புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் இவர் ஆசிரியராகப்
பணிபுரிந்த காலத்தில் பல ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு, ஆன்மீக
வகுப்புக்களையும் நடத்திவந்தார். 1968 இல் சர்வோதய இயக்கத்தை
ஆரம்பித்தார். 1970 இல் 'சத்தியம்' என்ற பத்திரிகையை வெளியிட்டார்.
1972 இல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலில் நன்நீர்க் கிணறுகளில்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராடி, காவல்துறையினரால்
தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
|
|
 |
|
|