முருகையன்:

பிறந்த இடம்:  கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம் (1935)
 

 

படைப்பாற்றல்: கவிதை, காவியம், மேடைப்பா நாடகம், விமர்சனக் கட்டுரை, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • ஒரு வரம் - 1964
  • நெடும் பகல்(காவியம்) – 1967
  • அது – அவர்கள் - 1986
  • நாங்கள் மனிதர் - 1992
  • ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் - 2001
  • ஆதிபகவன் - 1978
  • மாடுகளும் கயிறுகள் அறுக்கும்

பா நாடக நூல்கள்:

  • கோபுரவாசல் - 1969
  • வெறியாட்டு – 1989
  • மேற்பூச்சு – 1995
  • சங்கடங்கள் - 2000
  • உண்மை (மொழிபெயர்ப்பு) – 2002

எழுதிய மேடை நாடகங்கள்:

  • கடூழியம்
  • அப்பரும் சுப்பரும் - 1971

திறனாய்வு நூல்கள்:

  • ஒருசில விதி செய்வோம்
  • இன்றைய உலகில் இலக்கியம்
  • கவிதை நயம் (பேராசிரியர் க.கைலாசபதியுடன் இணைந்து)

உரைநடைச் சித்திரம்:

  • திருவெம்பாவையர்

விருதுகள்:

  • சாகித்திய இரத்தினா விருது - இலங்கை அரசு – 2007

இவர் பற்றி:

  • இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பினை பாடநெறியாக கற்பித்து வந்தார். 1964 – 65 காலப்பகுதியில் வெளிவந்த 'நோக்கு' என்ற காலாண்டுக் கவிதை இதழின் இணையாசிரியராகவம் பணியாற்றினார். இவர் இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்ற விஞ்ஞானப் பட்டதாரி.
    1961 இல் இலண்டனில் கலைமாணிப்பட்டத்தைப் பெற்றார். 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி இவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது. மறைந்த கவிஞர் மகாகவியுடன் இணைந்து தகனம் என்ற காவியநூலையும் எழுதியிருக்கிறார். இவரது கவிதைகள் வெறுமனே உணர்ச்சிகளின் வெளிப்பாடாக மாத்திரம் இல்லாமல் ஆழமான சிந்தனைகளைத் தூண்டுகின்ற கவிதைகளாகவும் விளங்குவதாக பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுவார். 27. 07. 2009 தனது 74 வயதில் காலமானார்.