(நிழற்படம் இல்லை)
மகேசன்.நா:

பெயர்: நா. மகேசன்
பிறந்த இடம்:
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வசிப்பிடம்: சிட்னி, அவுஸ்திரேலியா

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், நாடகம், சிறுவர் பபாடல்கள், சிறுவர் நாடகம், கட்டுரை

படைப்புக்கள்:

  • குறளும் கதையும் (சிறுகதைகள்)
  • பாட்டும் கதையும் (கதைப்பாடல்கள்)
  • முனியன் முரளிகானன் (குறுநாவல்)
  • ஆத்திசூடி அறநெறிக்கதைகள்
  • உடைந்த உள்ளம் (நாவல்)
  • அவுஸ்திரேலியாவில் ஆத்திசூடி (சிறுவர் கதைத்தொகுதி)
  • திருமுறையும் திருக்கதையும் (தேவார விளக்கக் கதைகள்)
  • பாலர் நாடகங்கள் பத்து
  • நாடகக் கவியரங்கு நாலு (சிறுவர் கவியரங்குத் தொகுதி)
  • ஆறுமுகமான பொருள் (திருப்புகழ் விளக்கம்)
  • திருவிழா (சிறுவர் சைவ சமய நாவல்)
  • A Glimpse of Saiva Religion (சைவ சமய விளக்கம்)
  • சிறுவர் பாடல்கள்
  • சைவசமயக் குரவர் போற்றி மாலை
  • சைவசமய இறுதிச் சடங்கு – நடைமுறையும் விளக்கமும்
  • சிட்னி முருகன் பிள்ளைத்தமிழ் (பிரபந்த நூல்)
  • ஒளவை வந்தால்..... (மாணவர் மேடை நாடகங்கள்)

விருது:

  • "The Achiever" விருது – அவுஸ்திரேலிய அரசு - 2006

இவர் பற்றி:

  • மேடை நாடக விற்பன்னர். இலங்கை வானொலியில் 'சிறுவர் மலர்' என்ற நிகழ்ச்சியை  மிகவும் சிறப்பான முறையில் நடத்திவந்தவர். இதனாலேயே இவர் எல்லோராலும் வானொலிமாமா என அழைக்கப்பட்டார்.