சோமகாந்தன்.நா:

பெயர்: நா. சோமகாந்தன்
பிறப்பிடம்:
கலட்டி, கரணவாய், யாழ்ப்பாணம்.
(1930)

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், விமர்சனம்,  கட்டுரை, பத்தி எழுத்து

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • நிலவோ நெருப்போ
  • ஆகுதி
  • விடிவெள்ளி பூத்தது

நாவல்கள்:

  • பொற்சிலையில் வாடும் புனிதர்கள்
  • பொய்கை மலர்

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • ஈழத்து இலக்கிய வரலாறு – பல்துறை நோக்கு
  • நிகழ்வுகளும் நினைவுகளும் - காந்தன் கண்ணோட்டம்
  • தத்துவச் சித்திரங்கள் (வானொலி உரைகள்)
  • Ancient Temples of Shiva in Srilanka
  • Lanka and Ramayanam
  • பொய்கை மலர் - பயணக்கட்டுரை நூல்
  • மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்
  • 'காந்தன் கண்ணோட்டம்' – பத்தி எழுத்துக்களின் தொகுப்பு
  • நாவலர் பெருமான் 150 வஆ ஜயந்திவிழா மலர் - 1972
  • ஈழத்தமிழருக்கு ஏன் இந்த வேட்கை – 2000

விருதுகள்:

  • இலக்கியக் குரிசில் - திருகோணமலை இலக்கிய நண்பர்கள் இவரது இலக்கியப் பணியைக் கௌரவித்து வழங்கினர் - 1991
  • தமிழ் ஒளி - இலங்கை கலாச்சார அமைச்சு – தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி வழங்கியது - 1994
  • தமிழ்மாமணி விருது – நீர்கொழும்பு இந்து இலக்கிய மன்றம் - 1993
  • தமிழ் ஒளி என்னும் பட்டம் - இலங்கை கலாச்சார அமைச்சு – 1994

இவர்பற்றி:

  • என்.சோமகாந்தன்1962 இல் சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். இவர் ஆங்கிலத்திலும் தனது படைப்புக்களை எழுதிவந்தார்.  இவரது மனைவியே பெண்ணிய எழுத்துக்களைப் படைத்துவரும் பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன். இவர் தனது ஆரம்பக்கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். பின்னர் மகாஜனாக்கல்லூரியிலும் கல்வி கற்று, அங்கு ஆசிரியராகவும் பணியாற்றினார். இலங்கை வானொலியில் தத்துவச் சித்திரம், விபரணச் சித்திரம் என்பன போன்ற நிகழ்ச்சிகளை திறம்பட நடத்தியுள்ளார். 'மழை பொய்த்து விட்டால்' என்னும் வானொலி நிகழ்ச்சி பலரதும் பாராட்டைப் பெற்றது. ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார். 1974 இல் தமிழ் சிங்கள எழுத்தாளர்களை இணைத்து பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் தமிழ் எழுத்தாளர்களை உலகறிய வைக்க ஒரு மகாநாட்டை நடத்தினார். 'ஈழத்துச் சோமு' ன்று பலராலும் அறியப்பட்டவர். சோமகாந்தன் 2006 ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி காலமானார்.