|
 |
நயீமாசித்தீக்:
பெயர்: நயீமா சித்தீக்
பிறந்த இடம்: ஹப்புத்தளை, பதுளை
வசிப்பிடம்: கம்பளை
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை
படைப்புக்கள்:
- ஆயிரம் வினாக்களும் விடைகளும் - தமிழ் பாடநூல்
- சீறாப்புராணம் நபி அவதாரப் படலம் - தமிழ் பாடநூல்
நாவல்:
சிறுகதைத் தொகுப்பு:
- வாழ்க்கைப் படகு
- வாழ்க்கைச் சுவடுகள் -
1987
- வாழ்க்கை வண்ணங்கள் -
2004
- வாழ்க்கை வளைவுகள் - 2005
விருதுகள்:
- இலக்கியத் தாரகை (நஜ்முல் அதீப்) – முஸ்லிம் சமயக் கலாசாரத்
திணைக்களம் - 1991
- சிறுகதை செம்மணி – சிந்தனை வட்டம்
- 2004
- கலாபூஷணம் - இலங்கை அரசு –
2005
இவர் பற்றி:
- இவர் தனது பள்ளிப் பருவத்திலிருந்தே எழுதத் தொடங்கியவர்.
பசறை மத்திய கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் தனது
கல்வியைப் பெற்றவர். 1950 களில் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும்
வெளியாகிவரும் இதழ்களில் எழுதிவந்தவர். தீபம், மணிவிளக்கு ஆகிய
இதழ்களில் வெளியான இவரது கதைகள் குறிப்பிட்டு விமர்சகர்களால்
பாராட்டப்பட்டவை. இவர் கம்பளை சாகிராக் கல்லூரியில் ஆசிரியராகப்
பணிபுரிந்தார். பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியை. இவர் இதுவரை நான்கு
நாவல்கள், 750 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர்
புகழ்பெற்ற சிறந்த பெண் பேச்சாளரும் ஆவார். இலங்கை வானொலியிலும் பல
நிகழ்ச்சிகளை, கவியரங்குகளை நடத்தியுள்ளார். தினபதி, சிந்தாமணி
பத்திரிகைகளின் ஹப்புத்தளை பிராந்திய நிருபராகவும் பணியாற்றியவர்.
தீப்பொறி இதழின் பெண்கள் பகுதியைப் பொறுப்பேற்று அதனூடாகப் பெண்களின்
விடிவிற்காகப் பணியாற்றினார். தனது படைப்புக்களில் வாழ்க்கையின்
உணர்வுகளை மிக அவதானமாகப் பல்வேறு கோணங்களில் பதிவுசெய்துள்ளார்.
|
|
 |

|