நிழற்படம் இல்லை

நீர்கொழும்பூர் முத்துலிங்கம்:

புனைபெயர்: நீர்கொழும்பூர் முத்துலிங்கம்
 

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாவல், ஓவியம், திரைப்படம், இயக்கம், நடிப்பு, மேடை நாடக எழுத்தும் இயக்கமும்

படைப்புக்கள்:

  • ஒரு ஜனனத்தின் அஸ்தமனம் - ஒரு நாவலும், ஐந்து சிறுகதைகளும் கொண்ட தொகுதி – 1994
  • அந்த நதியும் அதன் மக்களும் - 2005

இவர் பற்றி:

  • 60களின் இறுதியில் எழுதத் தொடங்கியவர். இவரது முதல்கவிதை 'கல்கி'யில் வெளியானது. இவர் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் ஆழ்ந்த திறன் கொண்டவர். இந்த மொழியறிவு இவரது இலக்கியப் பரப்பையும், படைப்பையும், செழுமைப்படுத்தின. விசாலப்படுத்தின. ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் தனித்தன்மை வாய்ந்தவை. செதுக்கிச் செதுக்கி வடித்த உயிர்ச்சிற்பம் போல வசீகரமாகவும் மனதைத் தொட்டு உலுப்புகிறாற்போல கருத்தமைதியோடும் இழைந்திருப்பவை இவரது கதைகள். சொன்னவற்றையும் சொல்லாமல் விட்டவற்றையும் வாசகனின் மனதில் பதியவைக்கிற எழுத்து வித்தை இவரது பலம் என்றே சொல்லவேண்டும்.



Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்).