|
நிழற்படம் இல்லை |
நெல்லை பேரன்.க:
பெயர்: கந்தசாமி பேரம்பலம்
புனைபெயர்: நெல்லை. க.பேரன்
பிறந்த இடம்: நெல்லியடி, யாழ்ப்பாணம் (1946 – 1991)
|
|
படைப்பாற்றல்: நாவல், சிறுகதை, பயணக்கட்டுரை, நகைச்சுவைத்தொடர், வானொலி
நாடகங்கள், கவிதை படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்
- 1975
- வளைவுகளும் நேர்கோடுகளும் -
1978
நாவல்கள்:
குறுநாவல்:
- விமானங்கள் மீண்டும் வரும் -
1985
இவர் பற்றி:
- இவர் 1960
களில் எழுத்துத் துறைக்கு வந்தவர். தன்னுடைய
மாணவப் பருவத்திலயே எழுத்தாளராகப் பரிணமித்தவர். மானிட நேயமும், சக
எழுத்தாளரோடு பிரியமும் கொண்ட வாழ்ந்தவர். இவர் அஞ்சல் துறை
அலுவலராகப் பணியாற்றியவர். இவருடைய பல சிறுகதை, குறுநாவல்கள்
போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளன. இவர் இராணுவத்
தாக்குதலின் விளைவாக சொந்த வீட்டிலேயே குடும்பத்தோடு (1991)
அகால
மரணமடைந்தார். இந்தியா, குவைத் போன்ற நாடுகளில் சில காலங்கள்
வாழ்ந்தவர். குவைத்தில் வாழ்ந்த அனுபவத்தை வைத்து இவர் எழுதிய 'விமானங்கள்
மீண்டும் வரும்' என்ற குறுநாவல் பரிசும், பாராட்டுகளும் பெற்றது.
மத்திய கிழக்கைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட தரமான படைப்பு என்ற
மதிப்பீட்டையும் இந்நூல் பெற்றுக்கொண்டது.
|
|
 |

|