படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாடகம், பேச்சு, வில்லுப்பாட்டு,
மொழிபெயர்ப்பு, ஓவியம், ஆய்வுக்கட்டுரை
படைப்புக்கள்:
கவிதைத் தொகுப்புகள்:
- வசந்தங்களும் வசீகரங்களும் -
1998
சிறுவர் இலக்கிய நூல்கள்:
- ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள் -
2002
மொழிபெயர்ப்பு நூல்கள்:
- உழைப்பால் உயர்ந்தவர்கள் -
2008
- கசந்த கோப்பி – ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு
- 2011
விருதுகள்:
- சிறந்த பத்திரிகையாளருக்கான 'எஸ்மன்ட் விக்கிரமசிங்க ஞாபகார்த்த
ஐனாதிபதி விருது – 1993
- மத்திய மாகாண சாஹித்திய விருது – வசந்தங்களும் வசீகரங்களும் கவிதை
நூலுக்கு – 2000
- தேசிய சாஹித்திய மண்டல விருது – மொழிபெயர்ப்பு நாவலுக்காக
- 2008
இவர் பற்றி:
- இவர் தடம் பதித்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும், மூத்த
பத்திரிகையாளரும் ஆவார். இலங்கையின் மூத்த தலைமுறைப் படைப்பாளிகளுள்
குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவர் மொஸ்வில்ல தோட்ட பாடசாலை,
நாவலப்பிட்டிய கதிரேசன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் கொழும்பு
பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர்.
இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணியாக தன்னை
உயர்த்திக்கொண்டவர். 'விஜய்'பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர். தற்போது
'சுகவாழ்வு' ஆரோக்கிய சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.
மலையக மக்கள் ஆய்வு மன்றத்தின் தலைவராக, மலைநாட்டு எழுத்தாளர்
மன்றத்தின் இணைச் செயலாளராக, தமிழ்-சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின்
துணைச் செயலாளராக, மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தின்
இணைப்பாளராக செயற்பட்டு வரும்
எழுத்தாளர் இரா.சடகோபன் 35க்கும் மேற்பட்ட நூல்களுக்கு
அட்டைப்படங்களையும் வரைந்துள்ளார். தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட
கலை-இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டி பலதடவை பரிசில்களை பெற்றுள்ளார்.
|