செய்யித் ஹஸன் மௌலானா.எஸ்.ஏ.ஆர்.எம்:
(
ஜனாப் எஸ்.ஏ.ஆர்.எம். செய்யித் ஹஸன் மௌலானா)

பெயர்:  ஏ.எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யித் ஹஸன் மௌலானா
பிறந்த இடம்:  மருதமுனை
(10.10.1937)

படைப்பாற்றல்: கட்டுரை, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் - 1968
  • யாழ்ப்பாணத்து மகா வித்துவான் பத்றுதீன் புலவரின் முகியதீன் புராணம் முதற்பகுதியில் உள்ள 1056 செய்யுள்களுக்கு உரை – 1989

மொழிபெயர்ப்புக்கள்:

  • தேசமான்ய டாக்டர் ஏ.எம்.முஹம்மது சஹாப்தீன் எழுதிய  Subi Doctrine in Tamil Literature  என்னும் நூலை தமிழாக்கம் செய்தார் - 1995
  • இறைவனும் பிரபஞ்சமும் என்னும் நூலுக்கு விரிவான நூல்நோக்கு

விருதுகள்:

  • இலக்கிய வேந்தர் என்னும் பொருள் படும் தாஜூல் அதீப் பட்டமும், ரூபா 10,000 பொற்கிழியும்
    - இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டு அமைச்சு
  • கலாபூஷணம் விருதும், ரூபா 10,000 பொற்கிழியும் - கலாச்சார அலுவல்கள் திணைக்களம்

இவர் பற்றி:

  • இவரது இலக்கியக் கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இஸ்லாம் சமயம் பற்றி தொடர் கட்டுரைகள், அறபுத் தமிழ்க் கவிதைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் பல படைத்துள்ளார்.