படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம்,
கட்டுரை
படைப்புகளில் சில:
குறுநாவல்கள்:
- இருளினுள்ளே
- கோபுரங்கள் சரிகின்றன
- ஒரு குப்பி விளக்கு எரிகிறது
நாவல்கள்:
- திருமணத்திற்காக ஒரு பெண்
காத்திருக்கிறாள்
- மண்ணிலே தெரியும் ஒரு தோற்றம்
- எரிமலை
- எரி நெருப்பில் இடைபாதை இல்லை
- லெனின் பாதச் சுவடுகளில் -
2007
எழுதிய நாடகங்கள்:
இவரைப்பற்றி:
-
ஈழத்தின் மூத்த
எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.அகஸ்தியர். இருநூறுக்கு மேற்பட்ட
சிறுகதைகள், ஒன்பது நாவல்கள், எட்டுக் குறுநாவல்கள், பத்துக்கு
மேற்பட்ட உணர்வூற்றுச் சித்திரங்கள் என்பவற்றின் படைப்பாளி.
இவருடைய எழுத்துக்கள் அடக்கியொடுக்கபட்ட மக்களின் விடிவுக்கான
எழுத்துக்கள். யாழ்ப்பாணப் பேச்சு மொழியைத் திறமையாகப்
பயன்படுதியவர் இவர். இவர் புலம்பெயர்ந்து வாழ்ந்த பிரான்ஸ் நாட்டில் அமரராகிவிட்டார்.
முற்போக்கு எழுத்தாளர். சமுதாயத்தின் ஆழங்களைத் தேடித் தேடி
கருவாக்கியவர். மார்க்ஸியம் கூறும் கொள்கைகளை சமுதாயப் பார்வையோடு
ஆக்கங்களைப் படைத்தார். இலங்கை வானொலியில் அதிகமாக சிறுகதைகள்
எழுதியவர்களில் அகஸ்தியருக்கு தனியிடம் உண்டு.
|