சத்திய எழுத்தாளன் (காதிபுல் ஹக்) – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்
இராஜாங்க அமைச்சு - 1991
கலாபூஷணம் - கலாசார அமைச்சு –
2007
சமுதாய எழுத்தாளர் பட்டமும்
பொற்கிழியும் - தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடந்த
15 ஆவது திருக்குர்ஆன் மாநாடு –
1994
சமுதாயக்காவலன் - அகில இலங்கை
நல்லுறவு ஒன்றியம் - 1996
சிரேஷ்ட படைப்பாளிக்கான விருதும்
பொற்கிழியும் - இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், கொழும்பு -
2002
இவர் பற்றி:
இலங்கை தமிழ்ப் பத்திரிகைத்துறை
ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகத்தினால் பட்டை தீட்டப்பட்டு, சிந்தாமணி
பண்ணையில் தமிழில் முதல் துப்பாய்வுத்துறை பத்திரிகையாளனாக உருவான
பன்முனை எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர்கனி தினகரன் வாரமஞ்சரியில்
04.07.1963 இல் பாலர் கழகம் பகுதியில்
கல்வி எனும் தலைப்பில் எழுதிய முதல் மரபுக்கவிதை மூலம் எழுத்துலகில்
கால்பதித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கை பரப்பேடான 'காங்கிரஸ்'
இரு வாராந்திரியின் செயல்பாட்டு ஆசிரியராக சுமார் பத்து வருடங்கள்
பணியாற்றியுள்ளார்.