கார்மேகம்.எஸ்.எம்:

பெயர்:எஸ்.எம்.கார்மேகம்
புனைபெயர்:கல்மதுரையான், ஜெயதேவன்
பிறந்த இடம்: கல்மதுரை, கொட்டகலை
(19.11.1939)

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, நாவல்

படைப்புக்கள்:

  • கண்டி மன்னன்
  • ஈழத்தமிழரின் எழுச்சி
  • ஒரு நாளிதழின் நெடும் பயணம் - 2002

தொகுப்பு நூல்கள்:

  • கதைக்கனிகள் - மலையக சிறுகதைகள்

மித்திரன் வாரமலரில் வெளியாகிய நாவல்கள்:

  • தந்தையின் காதலி
  • அழைக்காதே நெருங்காதே

இவர் பற்றி:

  • ஈழத்தில் வீரகேசரி மற்றும் தமிழக தினமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியவர். புலம்;பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து வந்தார். வீரகேசரியில் கல்மதுரையான் என்ற புனைபெயரில் தேயிலையின் கதை என்னும் கட்டுரைத் தொடரை எழுதினார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை ஆரம்பித்துமலையக எழுத்தாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியவர். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்தாகி இலங்கையை விட்டு மலையக மக்கள் வெளியேறியபோது வீரகேசரியில் இவர் எழுதிய 'அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்' அந்த மலையக மக்களின் கண்ணீர் காவியமாகும். அமரர் ஆகிவிட்டார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).