|
 |
|
டாக்டர்.
முருகானந்தன்.ச:
பெயர்: ச.முருகானந்தன்
பிறந்த இடம்: கரணவாய் கிழக்கு, கரவெட்டி (01.141950)
தொடர்புகளுக்கு:
முகவரி:
81, மனிங் பிளேஸ்,
வெள்ளவத்தை.
தொலைபேசி: 071 5198232
|
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, கட்டுரை, விமரசனம், பத்தியெழுதுதல்
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- மீன் குஞ்சுகள்
- தரை மீன்கள்
- இது எங்கள் தேசம்
- இனி வானம் வசப்படும்
- ஒரு மணமகளைத் தெடி
- நாம் பிறந்த மண்
கவிதைத் தொகுதிகள்:
- நீ நடந்த பாதையிலே
- துளித்தெழும் புதுச்செடிகள்
-
மருத்துவ நூல்:
- 'எயிட்ஸ் இல்லாத உலகம்
- நாளை நமதே
குறுநாவல் தொகுதிகள்:
- அது ஒரு அழகிய நிலாக்காலம்
- நெருப்பாறு
விருதுகள்:
- இலங்கை அரசின் சாகித்திய விருது
- தரை மீன்கள்
- சென்னை இலக்கியச் சிந்தனைப் பரிசு
- மீன் குஞ்சுகள்
- தமிழலைப் போட்டிப்பரிசு
- கனக செந்திநாதன் ஞாபக குறுநாவல்
பரிசு
- பூபாள ராகங்கள் சிறுகதைப்
போட்டியில் பரிசு
- வடமாகாண விருது
- 'எயிட்ஸ் இல்லாத உலகம்' -
வடமாகாண விருது
- மல்லிகை, ஞானம், தினகரன், முரசொலி,
ஈழநாதம், ஈழநாடு, தமிழ்அலை போட்டிகளில் பரிசு
- மாவீரர் தினப் போட்டியில்
முதற்பரிசு
இவர்பற்றி:
- ச.மு 1976ல்
அதாவது தனது 26வது வயதில் 'கண்களின்
வார்த்தைகள் தெரியாதோ' என்ற சிறுகதையுடன் தினகரன் ஊடாக எழுத்துலகில்
கால்வைக்கிறார். இவர் பல
சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள் மற்றும் உளவியல் சார்ந்த பல
கட்டுரைகளையும், நாடகங்கள் சிலவற்றையும் ஈழத்தில் வெளிவந்த
பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார். இலங்கை, இந்தியா, சர்வதேச
புலம்பெயர் சஞ்சிகைகளில் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன. இவர் ஆறு குறுநாவல்களை
எழுதியுள்ளார். தாரகை அவற்றுள் குறிப்பிடத்தக்கது.
இவரது படைப்புகள் பெரும்பாலும் எமது
நாளாந்த வாழ்வின் அனுபவங்களைப் பேசுகின்றன. சம்பவக் கோர்வைகள்
அழகாகப் பின்னப்பட்டிருக்கும். உணர்வுகளின் பிசைவுகள் ஊடாக வாழ்வை
தரிசிப்பதற்கு மேலாக அர்த்த புஸ்டியான நிகழ்வுகள் மனித வாழ்வின்
மாறுபட்ட கோணங்களை எம் முன் நிறுத்தும். தனது எழுத்துலகின்
ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் வர்க்க முரண்பாடுகள், சாதீயம்,
சீதனம், பெண்ணியம் போன்ற சமூகப் பிரச்சனைகளைத் தனது படைப்புகளின்
கருப்பொருளாகக் கொண்டிருந்தார். இருந்தபோதும் இனப் பிரச்சனை தீவிரம்
அடைந்து போர் முனைப்புப் பெற்ற போது போர்க்காலச் சிறுகதைகள் பலவற்றை
மிகவும் யதாரத்த பூர்வமாகப் படைத்துள்ளார். போரினால் மிகவும்
பாதிப்படைந்த மக்களிடையே வன்னிப் பகுதியில் மருத்துவராக நீண்டகாலம்
உணர்வுபூர்வமாகப் பணியாற்றியதால் இவருக்குக் கிட்டிய களநிலை
அனுபவங்கள் இவரது படைப்புகளுக்கு உண்மைத் தன்மையைக் கொடுத்துள்ளன.
இவரின் மனைவி சந்திரகாந்தா
முருகானந்தன். எழுத்தாளர்.
|
|
 |
|
|