உடலுழைப்பாளார்களாகவே இனங்காணப்பட்ட மலையக சமூகக் கவசத்தை
களைந்தெறிவதில் நாட்டம் கொண்டு, அறுபதுகளில் பீறிட்டுக் கிளம்பும்
தலைமுறையைச் சார்ந்தவர். தனது ஜீவனோபாகத்துக்காக மலையகத் தேயிலைத்
தொழிற்சாலை ஒன்றின் அதிகாரியகாகப் பணிபுரிந்து கொண்டே தனது ஆக்க
இலக்கியத்தையும் ஆய்வு இலக்கியத்தையும் மேற்கொண்டு வருபவர். இருமுறை
சாகித்யப்பரிசைத் தன்னுடைய ஆய்வு நூல்களுக்காகப் பெற்றவர்.
இதுவரையிலும் இவருடைய ஒன்பது நூல்கள் அச்சில் வெளிவந்துள்ளன.