சரோ வர்ணன்:

பெயர்: சரோஜினி
புனைபெயர்: சரோ வர்ணன்
பிறந்த இடம்: கொழும்பு
வசிப்பிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
sarovarnan@gmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, கவிதை

படைப்புக்கள்:

  • ஒலியலைகளின் சங்கமம் - ஆவணத் தொகுப்பு

விருதுகள்:

  • ஆத்மாவின் ஓலங்கள்  சிறுகதை - இலங்கை வானொலி சிறுகதைப் போட்டி - பரிசு

இவர் பற்றி:

  • இவர் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (CTBC) நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். ஈழத்தில் பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது படைப்புக்களில் மனித நேயம் பின்னிப் பிணைந்திருப்பதையும், சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள குறைகள் சாடப்பட்டிருப்பதையும் காணலாம். உலகத் தமிழர், முழக்கம், தமிழர் செந்தாமரை, உதயன், தூது, சிறகு, சிலொன்ரைம்ஸ், தமிழர் பூங்கா ஆகியவற்றில் இவரது படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.