|
நிழற்படம் இல்லை |
இராசதுரை.செ:
பெயர்: செல்லையா இராசதுரை
பிறந்த இடம்: சிங்களவாடி, மட்டக்களப்பு
(27.07.1925)
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை, பேச்சு
படைப்புக்கள்:
- ராசாத்தி – குறநாவல் -
1982
- பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
- சொற்பொழிவுகளின் தொகுப்பு
- அன்பும் அகிம்சையும் - தேசிய
ஒற்றுமைக்கு வழி – 1984
- மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு
- இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்
விருதுகள்:
- இலக்கிய கலாநிதிப் பட்டம் -
மதுரைப் பல்கலைக்கழகம்
- சொல்லின் செல்வர்
இவர் பற்றி:
-
சுவாமி
விபுலானந்தரை தேசிய வீரராகக் கணித்து தாபல் முத்திரை வெளியிட்டார்.
இவர் சுதந்திரன் பத்திரிகையின் துணை பத்திராதிபர் பதவியில்
இருந்தவர். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது மேயர்.
1956 – 1983 வரை மட்டக்ளப்பு தொகுதி
பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர். இந்து சமய, பண்பாட்டு,
தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர். அத்தோடு
மலேசியாவின் இலங்கைத் தூதுவராகவும் கடமையாற்றியவர். விபுலானந்தரின்
மதங்கசூளாமணியை மறுபதிப்புச் செய்தார்.
|
|
 |

|