நிழற்படம் இல்லை

சீனித்தம்பி கோபாலசிங்கம்:

பெயர்: சீனித்தம்பி கோபாலசிங்கம்
புனைபெயர்: வெல்லா ஊர் கோபால், ஈழக்கவி
பிறந்த இடம்: வெல்லாவெளி
(07.11.1945)
 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை

படைப்புகள்:

கவிதைத் தொகுதி:

  • கன்னி மலர்
  • இதய சங்கமம்
  • நெஞ்சக்கனல்
  • முல்லைக் குறுங்காவியம்
  • முற்றுப் பெறாத காவியம்
  • ஒரு கண்ணீர்க் காவியம்

ஆய்வு நூல்:

  • தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
  • கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம்

விருதுகள்:

  • கன்னி மலர் - கவிதைத் தொகுப்பு - இலங்கை சாகித்திய சான்றிதழ்
  • சமய நூல்களுக்காக - இலங்கை கலாச்சார அமைச்சின் பாராட்டும் விருதும்
  • வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய விருது

இவர் பற்றி:

  • இவர் தனது 14 ஆவது வயதில் எனது கிராமம் என்ற கவிதையை வீரகேசரியில் எழுதியிருந்தார். இவர் வீரகேசரி, தினமலர், தினபதி, சிந்தாமணி, சுதந்திரன், தேசியமுரசு, மல்லிகை, உதயம், கிழக்கொளி, ஆனந்தவிகடன், தாமரை என்பவற்றில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. வானொலியில் இவரது 13 மெல்லிசைப் பாடல்களும், 4 நாடகங்களும், 6 கவியரங்கங்களும் இடம்பெற்றிருக்கின்றன.