செம்பியன் செல்வன்:

பெயர்: ஆ. இராஜகோபால்
பிறந்த இடம்: திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

 

படைப்பாற்றல்: சிறுகதை, குறுங்கதை, நாவல், நாடகம், விமர்சனம், இதழாசிரியர், தத்துவ ஆய்வாளர்

படைப்புகள்:

சிறுகதைகள்:
  • அமைதியின் இறகுகள்
  • கிழக்கும் மேற்கும் முதலான பல தரமான சிறுகதைகளுக்குச் சொந்தக்காரர்.

குறுங்கதைகள்:

  • குறுங்கதைகள் நூறு – தொகுப்பு

நாவல்கள்:

  • நெருப்பு மல்லிகை
  • விடியலைத் தேடும் வெண்புறாக்கள்
  • கானகத்தின் கானம்

நாடகங்கள்:

  • மூன்று முழு நிகழ்வுகள்
  • இந்திரஜித்
  • சின்னமீன்கள்

விமர்சனம்:

  • ஈழத்துச் சிறுகதை மணிகள்

தத்துவம்:

  • நாணலின் கீதை

விருதுகள்:

  • இலங்கை சாகித்திய விருது -  சர்ப்ப வியூகம் –  சிறுகதைத் தொகுதி
  • கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் முதல்பரிசு பெற்றவர்.
  • ஈழநாடு நடத்திய வெள்ளிவிழா சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றவர்.

இவர் பற்றி:

  • இவர் பேராதனைப்  பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டதாரியாவார். செங்கை ஆழியானின் வாடைக்காற்று திரைப்படமாக உருவானபோது அதற்கு திரைக்கதை, வசனம் எழுதினார்.  இவர் தனித்துவமான ஓர் இலக்கியச் செல்நெறியைத் தனக்கென அமைத்துக்கொண்டவர். உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர். பல பரிசில்கள் பெற்றவர். காலமாகிவிட்டார்.