படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, நாடகம்
படைப்புக்கள்:
- நரி மாப்பிள்ளை – நாடகம்
- தங்கச்சி கொழும்புக்கோ போகிறாய்?
- நாடகம்
- ஒன்றுபட்டால் - நவீன நாட்டிய
நாடகம்
- சின்னையா சிவநேசனின் சிறுவர்
பாடல்கள் (ஆங்கிலம், தமிழ்)
- நாடும் நடப்பும்
இவர் பற்றி:
- இவர் வானொலி நாடகங்கள்
எழுதுவதிலும், நடிப்பதிலும் ஆர்வம் உடையவர். இவர் எழுதி
நெறிப்படுத்திய நாடகங்களில் 'தங்கச்சி கொழும்புக்கோ போகிறாய்?,
நினைத்தது நடந்ததா?, நரி மாப்பிள்ளை ஆகியன பிரபலமானவை. இவரது
ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினபதி, வீரகேசரி பத்திரிகைகளில்
வெளிவந்துள்ளன. 'அரங்கு' என்ற நாடகமன்றத்தின் செயலாளராகப் பல
ஆண்டுகள் செயல்ப்பட்டவர். இவர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில்
அதிபராக இருந்த காலத்தில் மாணவர்களை நெறிப்படுத்தி அலைகள்
ஓய்வதில்லை, ஒன்று பட்டால், ஆரடித்தார் ஆகிய நாடகங்களை
மேடையேற்றினார். தற்போது கனடாவில் கல்விச் சபை ஆலோசகர்
பதவியிலிருந்து இளைப்பாறி தற்போது பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றி
வருகிறார். அத்துடன் கனடா இந்து கலாசார மன்றத் தலைவராகவும்
பணியாற்றுகிறார். அண்மையில் மதுரை, ஒல்லாந்து, சூறிச் உலக
சைமாநாடுகளில் பங்குபற்றி உரையாற்றியுள்ளார்.
|