|
 |
பத்மநாதன்.சோ:
பெயர்: சோ. பத்மநாதன்
புனைபெயர்: சோ.ப
பிறந்த இடம்: ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம் (1939
செப் - 14) |
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, இசைப்பாடல்கள்
படைப்புகளில் சில:
- நல்லூரான் காவடிச் சிந்து –
1986
(இது இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்தின் குரலில்
ஒலிநாடாவாகவும் வெளியானது)
- வடக்கிருத்தல் - கவிதைத் தொகுப்பு
– 1998
- ஆபிரிக்கக் கவிதைகள் - ஆபிரிக்கக்
கவிதைகளின் தொகுப்பு – 2001
- தென்னிலங்கைக் கவிதை – ஆங்கில,
சிங்களக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு
- நினைவுச் சுவடுகள் - 2003
- முத்துச் சிரிப்பு - இசைப்பாத்
தொகுப்பு – 2006
இவர் பற்றி:
-
பன்முக ஆளுமை
கொண்ட கவிஞர். பெரும் கவிஞனாகவும், சிறந்த ஆங்கில ஆசிரியராகவும்,
மக்களைக் கவரும் பேச்சாளியாகவும், நல்ல விமர்சகராகவும் விளங்கினார்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் நன்கு பரிச்சயம் உடையவர்.
ஆங்கிலப் புலமை மிக்கவர். இவரது படைப்புக்கள் தினபதி, சிந்தாமணி,
மல்லிகை, தாயகம், முரசொலி, உதயன், தூண்டி, வெளிச்சம் ஆகிய
பத்திரிகைகளில் வெளிவந்தன. பலாலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில்
பயின்ற இவர் பிற்காலத்தில் அங்கு ஆங்கில விரிவுரையாளராகவும்,
ஆங்கிலத் துறைத் தலைவராகவும், உப அதிபராகவும், அதிபராகவும்
பணியாற்றியவர்.
|
|
 |

|