ஸ்ரீரஞ்சனி.வி:

பெயர்: ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா
பிறந்த இடம்: தெல்லிப்பழை
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
sri.vije@gmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, விமர்சனம்

படைப்புக்கள்:

சிறுவர் நூல்கள்:

  • தமிழ் படிப்போம் - பகுதி 1, 2 – 2009

சிறுகதைத் தொகுப்பு:

  • நான் நிழலானால் - 2010

இவர் பற்றி:

  • இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியில் தனது உயர்தரக் கல்வியைக் கற்றவர். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டார். கனடாவிற்கு புலம்பெயர்ந்த பின் தன் பட்டப்படிப்பை மேற்கொண்டார். ஸ்ரீ ரஞ்சினி 1984 இல் ஈழநாடு பத்திரிகையில் மனக்கோலம் என்ற சிறுகதை மூலம் எழுத்துலகிற்குள் பிரவேசித்தார். இலங்கை கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தற்போது கனடாவில் தமிழ் ஆசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், இரசாயனவியலாளராகவும் பணியாற்றுகிறார். இவருடைய படைப்புக்கள் ஈழத்தில் இருந்து வெளியாகும் ஈழநாடு, தினக்குரல், மல்லிகை, ஞானம், நான், ஜீவநதி ஆகியவற்றிலும், பிறநாட்டு சஞ்சிகை, பத்திரிகைகளான உதயன், வைகறை, தூறல், காலம், காலச்சுவடு, யுகமாயினி ஆகியவற்றிலும் வெளிவந்துள்ளன.
     
 

Copyright© 2009,TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).