தாமரைத் தீவான்:

பெயர்: சோமநாதர் இராசேந்திரம்
பிறந்த இடம்: தாமரைவில், கிண்ணியா, திருகோணமலை(24.07.1932)
புனைபெயர்கள்: தாமரைத்தீவான், கோலேந்தி, எறிகோலன், சுதந்திரன், அம்பலவாணர், அகதிக்கவிராயர், சாப்பாட்டுக் கவிராயர், மலைப் புலவர்
தொடர்புகளுக்கு:
முகவரி: 25/5, 2ஆம் ஒழுங்கை, 1ஆம் தெரு, இலிங்கநகர், திருகோணமலை
தொலைபேசி இல:
026 - 5670707

படைப்பாற்றல்:கவிதை, கட்டுரை, வில்லுப்பாட்டு, உரையாடல், சிறுவர் பாடல்கள், நாடகம்

படைப்புகள்:

கவிதைத் தொகுதிகள்:

  • பிள்ளைமொழி – 1992
  • கீறல்கள் - 1992
  • கட்டுரைப்பத்து – 1997
  • போரும் பெயர்வும் - 2001
  • வள்ளுவர் அந்தாதி – 2002
  • முப்பத்திரண்டு – 2004
  • சிறுவிருந்து – 2004
  • ஐம்பாலைம்பது – 2001
  • சோமம் - 2005
  • என் பா நூறு – 2005
  • ஐந்தொகை – 2005
  • நீத்தார் பெருமை – 2005
  • இணைப்பு – 2008
  • அன்பழைப்பு – 2009
  • மொழிநூறு – 2010
  • மும்முறை – 2010
  • வில்லுப்பாட்டு – 2010
  • சிட்டு பத்து – 2010
  • பத்துப் பத்து – 2010
     

விருதுகள்:

  • வடக்கு கிழக்கு ஆளுநர் விருது – 2001
  • கலாபூஷண விருது - இலங்கை அரசு – 2004
     
இவர் பற்றி:
  • இவரது கவிதைகள் சிந்தாமணி, வீரகேசரி, புதிய உலகம் போன்றவற்றில் வெளிவந்துள்ளன. மரபுக்கவிதையில் அதிக ஈடுபாடுடையவர். ஆகவல், வெண்பா, விருத்தம், வஞ்சிப்பா, கலிப்பா, கட்டளைக் கலித்தொதை போன்றவற்றில் கைதேர்ந்தவர். ஈழத்தின் மூத்த முன்னணிக் கவிஞர்களுள் சிறப்பித்துக் கூறக்கூடியவர். இவரது முதல் ஆக்கம் சுதந்திரன் பத்திரிகையில் 1956 இல் 'வெள்ளைப் பூனை' என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து வீரகேசரி, சுடர்ஒளி, சிந்தாமணி, சுடர், சூடாமணி, தினமுரசு, தினகரன், தினக்குரல், தினக்கதிர் போன்ற பத்திரிகைகளிலும் உறவு, ஓலை, நேயம், புதிய உலகம், கவிதை உறவு, தாகம், ஈச்சம்பழம், கேணிச்சுடர், தமிழ்பாவை, மானுடம், அறிவு, நீங்களும் எழுதலாம், சிட்டு ஆகிய சஞ்சிகைகளிலும் பிறவற்றிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். ஆசிரியராக, அதிபராக பணியாற்றியவர்.