ஈழத்துச்
சிறுகதை எழுத்தாளர்களில் கணிசமாயும், கவன ஈர்ப்புக்குரியதாகவும்
எழுதியவர்களில் தாழையடி சபாரத்தினம் குறிப்பிடத்தக்கவர்;. 'கல்கி'
நடாத்திய சிறுகதைப்போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றதன் மூலம்
பலராலும் விதந்து பேசப்பட்டவர். ஆனந்தன் சஞ்சிகையில் 1954இல் 'குருவின்
சதி' என்ற சிறுகதையைப் படைத்தன் மூலம் தன்னை ஒரு தரமான
படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டவர்.