தங்கராசா சிவபாலு

பெயர்: தங்கராசா சிவபாலு
புனைபெயர்
கள்:தங்கபாலு,  குமுளன், கலாரசிகன் வன்னிமைந்தன்
தொடர்புகளுக்கு
:
முகவரி:
4-2800 Eglinton Avenue East.
Toronto
M1J-2C8.
Canada
தொலைபேசி:416-546-1394
Email: avan.siva55@gmail.com, or kumulan.siva@yahoo.com

படைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, திறனாய்வு.

படைப்புக்கள்:-

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • பாடசாலைமாணவர்களின் தகாதசெயல்கள் - காரணங்களும் தீர்வுகளும்

  • திருமணமுறிவுகளைத் தவிர்க்கும் வழிமுறைகள்

  • தமிழ் கற்போம் பயிற்சி நூல் (3 பாகங்கள்)

கவிதைத் தொகுப்பு:

  • உலகுக்குஉழைப்போம்

இவரைப்பற்றி:

முல்லைத்தீவு குமுளமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட தங்கராசா சிவபாலு குமுளமுனை அரசினர் பாடசாலை, நெல்லியடி மத்தியகல்லூரி, வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றில் கல்வியை மேற்கொண்டபின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விமாணிபட்டத்தைப் பெற்றுக்கொண்டதோடு. யாழ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். கண்டி கட்டுகாஸ்தோட்டை புனித அந்தோனியார் பாடசாலை, முல்லைத்தீவு மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆசரியராகவும் முல்லைத்தீவு யோகபுரம் .வி..,மல்லாவி மத்தியகல்லூரி ஆகியவற்றின் அதிபராகவும். யோகபுரம் கொத்தணிப் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் 1978 தொடக்கம் 1990 வரையும் பணியாற்றியவர் பின்னர் மண்டைதீவு பகுதிப் பாடசாலைகளின் கொத்தணி அதிபராக 1990ல் கடமையாற்றியுள்ளார்.

கனடாதமிழ் எழுத்தாளர் இணையத்தின் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் பணியாற்றியவர். ரொறன்ரோகல்விச் சபையிலும் யோக் கல்விச் சபையிலும் தமிழைக் கற்பித்துவருவதோடு ,வளர்ந்தோருக்கு ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும் கற்பித்துவருகின்றார்.

சங்கப்பொழில், கம்பன்விழாமலர், வித்துவரத்தினம்,கதிர் உலா, ஈழத்துத் தபோதனர்கள், .பொ.செல்லையா வாழ்வும் வழியும்,போன்றவற்றைப் பதிப்பித்தும் உள்ளார்.

கட்டுரைகள், செய்தி விபரணங்கள், விமர்சனங்கள் என்பனவற்றை பல்வேறு பத்திரிகைகள், மாந்தாந்த, வருடாந்த இதழ்களில் எழுதிவரும் இவர் விளம்பரம் பத்திரியையில் இலக்கியத்துறை சார்ந்தபடைப்புக்களைத் தொடர்ந்து எழுதிவருகின்றார். உலகத்தொல்காப்பிய மன்றத்தின் கனடாக்கிளையின் தலைவராகவும் உள்ளார்.