|
 |
|
தர்மு சிவராமு:
பெயர்:
தருமு அரூப் சிவராமு
புனைபெயர்கள்: பிரமிள், பானுசந்திரன், ஒளரூப் சிவராம்
பிறந்த இடம்: திருகோணமலை (20.4.1939) |
|
படைப்பாற்றல்:
புதுக்கவிதை, கவிதை, விமர்சனம், சிறுகதை, ஓவியம், சிற்பம்
படைப்புக்கள்:
- ஆயி – 1990
- கைப் பிடியளவு கடல் -
1976
- தமிழின் நவீனத்துவம் -
1986
- நட்சத்திரவாசி – 1993
- மீறல் - 1993
- மார்க்ஸூம் மார்க்ஸீயமும் -
1999
- மேல் நோக்கிய பயணம் -
1980
- லங்காபுரி ராஜா – 1988
- விமர்சன ஊழல்கள் - 1982
- விமர்சன மீட்சிகள் - 1996
- விமர்சனாஸ்ரமம் - 1995
- ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை –
1984
விருதுகள்:
- புதுமைப்பித்தன் விருது –
நியூயோர்க் தமிழ்ச்சங்கம் - 1996
- புதுமைப்பித்தன் வீறு –
கும்பகோணம் சிலிக்குயில் - 1995
இவர் பற்றி:
- தமிழில் வசன கவிதை என்னும்
பெயரில் தொடங்கிப் புதுக்கவிதை என்னும் பெயரில் நடந்த ஓர்
இயக்கத்தில் 'எழுத்து' பத்திரிகையில் எழுத ஆரம்பித்து 1997 வரை
தீவிரமாகச் செயல்பட்டவர் 'பிரமிள்'. புதுக்கவிதையில் படிமங்களை
அதிகமாக உபயோகிக்கத் தொடங்கியவராக அறியப்பட்டுப் 'படிமக் கவிஞர்'
என்று சொல்லப்பட்டார். இறுதிக் காலத்தில் கரடிக்குடி என்ற இடத்தில்
வசித்து வந்த தர்மு சிவராம் மூளையில் இரத்த அடைப்பு ஏற்பட்டு,
உடலின் வலது பக்கம் செயலிழந்து ஒருமாதத்துக்கும் மேலாக
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர். 1997ஆம்
ஆண்டு சனவரி 6ஆம் தேதி
காலமானார்.
|
|
 |
|
|