தெளிவத்தை யோசெப்:

பெயர்:  சந்தனசாமி ஜோசப்
பிறந்த இடம்:  தெளிவத்தை, இலங்கை

 
படைப்பாற்றல்: சிறுகதை, குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வு, திரைப்படக்கதை, தொலைக்காட்சி, வானொலி நாடகம்

படைப்புகள்:

சிறுகதைகள்:

  • பொய்மை
  • பொட்டு
  • பந்து
  • பாவசங்கீர்த்தனம்

சிறுகதைத் தொகுப்புகள்:

  • நாமிருக்கும் நாடே – 1979

குறுநாவல்கள்:

  • பாலாயி (மூன்று  குறுநாவல்கள்) – 1997

நாவல்கள்:

  • காலங்கள் சாவதில்லை - 1974
  • மாறுதல்கள்

கட்டுரை:

  • மலையகச் சிறுகதைகள்
  • உழைக்கப் பிறந்தவர்கள்
  • மலையகச் சிறுகதை வரலாறு -  2000 -  இம்மூன்று படைப்புக்கள் வாயிலாக இருண்ட பகுதி இலக்கியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

விருதுகள்:

  • இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு - நாமிருக்கும் நாடே – சிறுகதைத் தொகுப்பு
  • சம்பந்தன் விருது – 2000 உட்பட பல பரிசுகள் பெற்றவர்.
  • கலாபூஷண விருது

இவர்பற்றி:

  • மலையத்தின் முன்னணி எழுத்தாளர் தெளிவத்தை யோசெப், ஈழத்துச் சிறுகதை மனைக்கு அழகு சேர்த்த சிறுகதைப்படைப்பாளி. அவரது முதலாவது சிறுகதை தமிழக 'உமா' பத்திரிகையில் வெளிவந்தது. மலையக மக்களின் வாழ்வு உயர்ச்சிக்காகச் சிந்தித்து எழுதுபவர். மலையக இலக்கியத்தின் அடையாளத்துக்கும் தனித்துவத்துக்கும் இவரின் எழுத்தும், ஆய்வுப் பணிகளும் தக்க பங்களிப்புச் செய்துள்ளன. பல நூல்களின் தொகுப்பாசிரியராகவும் இருந்துள்ளார்.