வல்வை கமலாபெரியதம்பி:

பெயர்: கமலவதனா பெரியதம்பி
புனைபெயர்கள்: வதனா, வல்வை கமலாபெரியதம்பி
பிறந்த இடம்: வல்வெட்டித்துறை
வசிப்பிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
முகவரி:
103 Comrie Terrace
Toronto, Ontario
M1M 3T1
Canada.

தொலைபேசி:
416 264 7161
மின்னஞ்சல்: 
valvaikamala@hotmail.com

படைப்பாற்றல்: இசைப்பாடல்கள், கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஓவியம், நாடகம்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • மாங்கல்யம் - 1993

நாவல்கள்:

  • நம் தாயர் தந்த தனம் - 1994

பாமலர்கள்:

  • அருளும் ஒளியும்

கட்டுரைத்  தொகுப்புகள்:

  • நீதிக்கதைகளில் ஆத்திசூடி – 1995
  • தமிழ் கவிக் காவினிலே – 1996
  • அருளும் ஒளியும் - 1996

கவிதைத் தொகுப்பு:

  • வல்வை கமலா கவிதைகள் - 2002

விருதுகள்:

  • கானக்குயில் - சுதந்திரன் பத்திரிகை நடாத்திய இசைக்கச்சேரியின்போது (கொழும்பு) – 1950
  • செந்தமிழ்ச் சொற்செல்வி - கதாப்பிரசங்கம் நடாத்தியதற்காக புங்குடுதீவு சிவன்கோயில் மக்களால் வழங்கப்பட்டது – 1965
  • கலைச்செல்வி - வல்வை முத்துமாரி அம்பாள் கோயில் விழாவின்போது கோயில் அறங்காவலர்களால் வழங்கப்பட்டது – 1963
  • தமிழல் தகவல் - சிறந்த எழுத்தாளருக்கான விருது - 1997

இவர்பற்றி:

  • இவர் தனது பதினாறு வயது முதல் இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பாடகியாக விளங்கினார் (1948 – 1988). சென்னையில் இசைத்துறையில் டிப்ளோமாப் பட்டம் பெற்றவர். தனது பதினெட்டாவது வயதில் இசையாசிரியரானார். இவர் 1943 முதல் பல கீர்த்தனைகளை தானே இயற்றி, ராகம் அமைத்து பாடிவந்தார். யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், மாத்தளை, பதுளை, கம்பளை, தெல்லிப்பளை, நெடுந்தீவு உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார். கல்லூரி விழாக்களுக்காக குறவஞ்சி நடனம், மணிமேகலை, சந்திரோதயம், மனோன்மணி ஆகிய நாட்டிய நாடகங்களை எழுதியுள்ளார். குறவஞ்சி நடனம், இராவணேஸ்வரன் உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்தும் உள்ளார். பருத்தித்துறை வடஇந்து மகளிர் கல்லூரியின் கல்லூரி கீதத்தை எழுதி, இசையமைத்தவரும் (1954) இவரே. எழுத்தாளர் என்பதற்கு மேலாக சிறந்த ஒரு இசைக்கலைஞர், வானொலிப் பாடகியாக விளங்கினார். 'ஜோடிக்கிழவர்கள்' என்ற இவரது முதலாவது சிறுகதை இவரது 16 வயதில் 1948 ஆம் ஆண்டு வீரகேசரிப் பத்திரிகையில் வெளியானது. தற்போது உடல்நலக் குறைவு காரணமாக தனது எழுத்துப் பணியை நிறுத்தியுள்ளார். இன்னும் அச்சேறாத பல கதைகளும், கட்டுரைக்கோப்புக்களும்  தம் வசம் வைத்திருக்கிறார்.