|
நிழற்படம் இல்லை |
வண்ணை தெய்வம்:
பெயர்: நா.தெய்வேந்திரம்
புனைபெயர்: வண்ணைதெய்வம், நந்தினி
பிறந்த இடம்: வண்ணார்பண்ணை கிழக்கு, நாச்சிமார் கோவிலடி.
யாழ்ப்பாணம் (22.08.1950)
வசிப்பிடம்: பிரான்ஸ்
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம்
படைப்புகள்:
கவிதைத் தொகுப்புகள்:
- விடிவை நோக்கி
- வானலையில் எங்கள் கவிதைகள் -பாகம்
1, 2
சிறுகதைத் தொகுப்புகள்:
- பொல்லாத மனிதர்கள்
- கொத்தல் மாங்காய் - 2000,
2005
கட்டுரைத் தொகுப்புகள்:
- கலைப்பாதையில் இவர் -கிறெகரி
தங்கராசா பற்றிய கலைப்பதிவுகள்
- கதாநாயகன் - பெஞ்சமின் இமானுவல்
பற்றிய கலைப்பதிவுகள்
- கலைத்துறையில் இருமலர்கள்
- யாழ்ப்பாணத்து மண் வாசனை
பிற படைப்புகள்:
- காலங்கள் வாழ்த்தும் 300
ஈழத்துக் கலைஞர்கள் - கலைஞர்களைப்
பற்றிய நூல்
- எடுத்துக்காட்டாக விளங்கிய
நாகேந்திரம் குடும்பம் - தனது குடும்ப வரலாற்றை நூலாக எழுதியுள்ளார்.
எழுதிய நாடகங்கள்:
- மனநீதி
- பதிலுக்குப் பதில்
- இதயமற்றவன்
- ஐயா மேடைக்கு வருகிறார்
- பண்டார வன்னியன்
- கிழமைச் சீட்டு
- தங்கையா? தாரமா?
- இரத்தக்கடன்
- வீரம் விளைந்தது
- சாவுக்கு சவால்
- தாயக தரிசனம்
இவர் பற்றி:
- இவர் பெனடிக்ட் பாலனின் வாழவேணும்
என்னும் நாடகத்தில் பெண் வேடமேற்று, தாயின் கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார். நீ ஒரு பெக்கோ. நல்வாழ்வு, சதுரங்கம், சங்கிலியன்,
மாலிகபூர், இதயமற்றவன், தங்கையா? தாரமா?, இசைமன்னன் நீரோ, சங்காரம்
முதலான பல நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் பாரிஸ் நாட்டிலும் பல
நாடகங்களை எழுதி, நடித்தும் இருக்கிறார். சின்னத் திரைப்படங்களிலும்
நடித்துள்ளார். இவரது படைப்புகள் பாரீஸ் ஈழகேசரி, புதினம், வீரகேசரி,
தினமுரசு, தினக்குரல், கனடா உதயன் ஆகிய பத்திரிகைகளில்
வெளிவந்துள்ளன. இவர் பாரிஸ் நாட்டில் சில வானொலி, தொலைக்காட்சி
ஊடகங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
|
|
 |

|