வரதர்:


பெயர்: தியாகர் சண்முகம் வரதராசன்
புனைபெயர்: வரதர், வரன்
பிறந்த இடம்: பொன்னாலை, யாழ்ப்பாணம்.
(1924)

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, இதழாசிரியர் (மறுமலர்ச்சி, ஆனந்தன், புதினம், தேனருவி, வெள்ளி)

படைப்புகள்:

  • யாழ்ப்பாணத்தார் கண்ணீர் - கவிதைத் தொகுப்பு
  • காவோலையின் பசுமை – நாவல் உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார்.
  • நாவலர்கோன் - நாவலர் சரித்திரம் - 15 ஆவது வயதில் எழுதினார்.
  • மலரும் நினைவுகள் - யாழ்ப்பாண விவசாயக் குடிகளின் வாழ்க்கை நிலையினை படம்பிடித்துக் காட்டும் நூல்.
  • மலரும் நினைவுகள் - சுயவரலாற்றுத் தரிசனம்
  • பாரதக் கதை
  • சிறுகதைப் பட்டறிவுக் குறிப்புகள்

இவர் பற்றி:

  • 35க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். மறுமலர்ச்சி, வரதர் புத்தாண்டு மலர், ஆனந்தன், தேன்மொழி, வெள்ளி, புதினம், அறிவுக்களஞ்சியம் ஆகிய சஞ்சிகைகளை நடத்தினார். ஓர் இரவிலே (ஈழகேசரி), அம்மான் மகள் (மறுமலர்ச்சி), யாழ்ப்பாணத்தார் கண்ணீர் (குறுங்காவியம் - வீரகேசரி) ஆகிய கவிதைகளையும் படைத்துள்ளார். வென்று விட்டாயடி இரத்தினா, உணர்ச்சி ஓட்டம், தையலம்மா (மறுமலர்ச்சி) ஆகியவை இவர் படைத்த குறுநாவல்கள். கல்யாணியின் காதல், விரும்பிய விதமே, கல்யாணமும் கலாதியும், குதிரைக்கொம்பன், தந்தையின் உள்ளம், ஆறாந்தேதி முகூர்த்தம், கிழட்டு நினைவுகள், விபசாரி, இன்பத்திற்கு ஓர் எல்லை, அவள் தியாகம், மாதுளம் பழம், வேள்விப்பலி, கயமை மயக்கம், உள்ளுறவு, பிள்ளையார் கொடுத்தார், கற்பு, புதுயுகப் பெண் என்பன இவர் படைத்த சிறுகதைகளில் சில.