வதிரி ரவீந்திரன்.சி:

பெயர்: சின்னத்தம்பி ரவீந்திரன்
பிறந்த இடம்: வதிரி, சாவகச்சேரி,யாழ்ப்பாணம்
(25.10.1953)
புனைபெயர்: வதிரி.சி.ரவீந்திரன், வானம்பாடி, குளைக்காட்டான்
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
vathiryravi@gmail.com

படைப்பாற்றல்:  கவிதை, சிறுகதை, நேர்காணல்கள், கட்டுரை, நாடகம், மெல்லிசை


இவர் பற்றி:

  • இவரது முதல் படைப்பு 'பூம்பொழில் என்னும் சஞ்சிகையில் 'எங்கள் எதிர்காலம்' என்னும் தலைப்பில் 1969 ஆம் ஆண்டு வெளியானது. இவரது படைப்புக்கள் பூம்பொழில், நான், மல்லிகை, ஞானம், ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல், தினகரன், தினபதி, சிந்தாமணி, தினமுரசு, நமது ஈழநாடு மற்றும் இந்திய சஞ்சிகைகளான பொறிகள், அக்னி, சுவடுகள் ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன. இலங்கை வானொலியின் ஒலிமஞ்சரி, வாலிபவட்டம், கலைப்பூங்கா, பாவளம், வானொலிக் கவியரங்குகள் மற்றும் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் உதயதரிசனம் என்ற நிகழ்ச்சியிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இளம் பிராயத்தில் நாடகத்துறையில் மிகுந்த ஈழுபாடு கொண்டவராக விளங்கினார். கவிஞர் காரை.செ.சுந்தரம்பிள்ளையின் 'சாஸ்திரியார் - 1968 நாடகத்திலும் இளவரசு ஆழ்வாப்பிள்ளையின் 'காலவாவி' நாடகத்திலும், கோவிநேசனின் 'நவீன சித்திரபுத்திரன்' நாடகத்திலும் நடித்துள்ளார். கலாவினோதன் பே.அண்ணாசாமியின் நாடகப் பட்டறையிலும் இணைந்து செயல்ப்பட்டுள்ளார். தற்போது கொழும்பில் விவாகப் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். 'மீண்டு வந்த நாட்கள்' என்ற கவிதை நூலை மிக விரைவில் வெளியிட உள்ளார். இலங்கையிலுள்ள கலைத்துறை, அரசியல்துறை சார்ந்த பல முக்கிய பிரமுகர்களை இவர் நேர்காணல் செய்துள்ளார்.
     

Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).