|
சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்
(ஜூலை – 04)
ப.கண்ணன்சேகர்
இந்திய நாட்டினை எழுச்சியுற செய்திட
இளையோரை தூண்டிய இன்முக பேச்சாளர்!
சிந்தனை கொண்டிட செழிப்போடு வாழ்ந்திட
சித்திரை நிலவென சொல்வளம் வீச்சாளர்!
வந்தனம் செய்திட வணங்கிடும் நாட்டினை
வ்லிமையின் பாரதம் வேண்டிய பன்பாளர் சுந்தர வடிவாக
சுதந்திரம் கண்டிட
சுடர்மிகு திரியென சொல்லிடும் நெறியாளர் !
பரமாம்ச சீடராய் பகுத்தறிவு பெற்றிட
பாரெல்லாம் ஆன்மீகப் பணிகளை செய்தவர்!
உரமேற்றி இந்தியரை உள்ளத்தால் உழுதிட
உண்மையின் ஒளியாக உருவாகி வந்தவர்!
முரண்பாடு களைந்திட முழுமையாய் ஆன்மீகம்
முழ்கியே முத்தொடுத்து முனைப்புடன் கண்டவர்!
வரம்தரும் சக்தியும் வாழ்ந்திடும் பூமியின்
வளமான கொல்கத்தா வணங்கியே வாழ்ந்தவர்!
மனிதனும் தெய்வமாகும் மார்கத்தை சொல்லிட
மாபெரும் தத்துவத்தை மக்களும் ஏற்றனர்!
கனிவுடன் பேசுவதும் கடவுளுக்கு சேவையென
காலத்தால் மறையாத கருத்தினை சொன்னவர்!
தனிமையே தவமென தென்னாட்டு குமரியில்
தெய்வீக துறவியாய் தியானத்தை கண்டவர்!
மணியான சொற்பொழிவு மாநகர் சிகாகோவில்
மலைத்திடும் பேச்சாற்றால் மாறாமல் தந்தவர்!
ப.கண்ணன்சேகர், திமிரி. பேச –
9894976159.
|
|
|
|